Spotlightசினிமா

ராக்கெட் டிரைவர் – விமர்சனம் 2/5

ஸ்ரீராம் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷ்வத், சுனைனா, நாகா விஷால், காத்தாடி ராமமூர்த்தி, ஜெகன், ராமச்சந்திரன் துரைராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் படம் தான் ராக்கெட் டிரைவர்.

படத்திற்கு இசையமைத்திருக்கிறார் கௌஷிக் க்ரிஷ்.

தயாரிப்பாளர் : அனிருத் வல்லப்

தயாரிப்பு நிறுவனம் : ஸ்டோரீஸ் பய் தி ஷோர்

ஒளிப்பதிவாளர் : ரெஜிமெல் சூர்யா தாமஸ்

கதைக்குள் பயணிக்கலாம்…

நாயகன் விஷ்வத், ஆட்டோ ஓட்டுகிறார். பகுதி நேர கல்லூரியில் படித்தும் வருகிறார். அப்துல்கலாமை ரோல் மாடலாக வைத்து, அவரைப் போன்றே மிகப்பெரும் விஞ்ஞானியாக வேண்டும் என்ற கனவில் வாழ்ந்து வருகிறார்.

வறுமையை நினைத்து வாழ்க்கையை வெறுத்து வாழ்ந்து வருகிறார். இந்த சூழலில், 1948 ஆம் வருடத்தில் இருந்து டைம் டிராவல் செய்து அப்துல்கலாம் (நாகா விஷால்) சிறுவனாக சென்னைக்கு வருகிறார்.

அவருடன் அறிமுகமாகும் விஷ்வத், அவர்தான் அப்துல்கலாம் என்று அறிகிறார். சிறுவயதில் ஏதோ ஒரு நிறைவேற்றாததால், அந்த ஆசையை நிறைவேற்ற தான் டைம் டிராவல் செய்து அப்துல்கலாம் சென்னை வந்திருப்பதாக அறிகிறார் விஷ்வத்.

அவரின் ஆசையை விஷ்வத் தீர்த்து வைத்தாரா இல்லையா ?? ஆசையை தீர்த்துக் கொண்ட அப்துல்கலாம் மீண்டும் தனது உலகத்திற்குச் சென்றாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் விஷ்வத் தனது கதாபாத்திரத்தை தெளிவாக கொடுத்திருக்கிறார். நாகா விஷாலுடனான உரையாடலில் கேரக்டரை மிக தெளிவாக செய்து முடித்திருக்கிறார்.

சுனைனாவிற்கு பெரிதான ஸ்கோப் இல்லை.

நாகா விஷாலும் தனக்கு கொடுக்கப்பட்டதை அளவோடு செய்து முடித்திருக்கிறார். காத்தாடி ராமமூர்த்தி வரும் சில நிமிடங்கள் மட்டும் நமக்கு சிரிப்பலைகள் எட்டிப் பார்க்கின்றன.,

மிகவும் எளிமையான கதை என்பதாலும், தரமான திரைக்கதை இல்லை என்பதாலும் ராக்கெட் டிரைவர் நமக்கு ஏதோ பெரிதாக ரசிக்கும்படியாக இல்லை என்பதே நிதர்சனம்.

இசையும் ஒளிப்பதிவும் ஓகே ரகமாக கடந்து செல்கிறது.

Facebook Comments

Related Articles

Back to top button