Spotlightசினிமா

மாஸ்டர் டூ ஆக்டர்… லோகாவில் மிரட்டிய சாண்டி!

மிழ் சினிமாவில் நடனத்தில் தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் தான் நடன இயக்குனர் சாண்டி.

இவரின் நடனத் திறமைக்கு தமிழகம் மட்டுமல்லாது உலகளவிலும் ரசிகர்கள் கூட்டம் ஏராளம். நடனத்தில் தனது உச்சத்தைப் பார்த்த சாண்டிக்கு நடிப்பதற்கும் வாய்ப்பு கதவைத் தட்டியது.

தனது வசீகரிக்கும் பேச்சாலும், சுறுசுறுப்பாலும் ஒரு சில படங்களில் தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி வந்த சாண்டிக்கு, விஜய்யின் லியோ படத்தில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரம் கிடைத்தது.

அதையும் அவர் மிரட்டலாக செய்து முடிக்க, அடுத்தடுத்த படங்களில் பெரிய கதாபாத்திரங்கள் இவரைத் தேடி வந்தன.

தற்போது மலையாளத்தில் உருவான லோகா திரைப்படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார் நடிகர் சாண்டி. இவரின் நடிப்பை பலரும் பாராட்டி இணையத்தில் இவரை தொடர்ந்து வாழ்த்தி வருகின்றனர்.

தனது நடிப்பின் திறமையை அடுத்தடுத்து வெளிப்படுத்தி வரும் சாண்டிக்கு, கைவசம் டஜன் கணக்கில் படங்கள் கையிருப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

திறமைக்கு பலனில்லாமல் போகுமா..??

நீங்க கலக்குங்க சாண்டி மாஸ்(ஆக்)டர் …

Facebook Comments

Related Articles

Back to top button