நடிகர் சரத்பாபுவின் மறைவிற்கு நடிகர் சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்,
தமிழ்த்திரைப்பட நடிகரும், அருமை நண்பருமான திரு.சரத்பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தகவல் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
1977 ஆம் ஆண்டு “பட்டினிப்பிரவேசம்” என்ற திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகில் அறிமுகமான பல்துறை நடிகரும் எளிமையாக பழகக்கூடிய குணச்சித்திர நடிகரான சரத்பாபு தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்தவர்.
தமிழ் திரைப்படங்களில் வேடன், மகாபிரபு, கேப்டன் போன்ற திரைப்படங்களில் அவருடன் இணைந்து பணியாற்றிய தருணங்களை நினைவுகூறுகிறேன்.
தமிழ்த் திரையுலகில் தனி அடையாளத்துடன், ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தி பிரிந்திருக்கும் சரத்பாபு அவர்களின் மறைவால் வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார்க்கும், உற்றார், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ” என்று கூறியுள்ளார்.