அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண்விஜய் என ஒரு நடிகர்கள் பட்டாளமே நடிக்கும் படம் ‘செக்க சிவந்த வானம்’. இப்படத்தினை மணிரத்னம் இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சில தினங்களுக்கும் முன் நான்கு நடிகர்களும் இணைந்து வரும் காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது படப்பிடிப்பிம் நடுவே இடைவேளையின் போது நடிகர் சிம்பு, விஜய் சேதுபதிக்கு உணவு ஊட்டி விடும் ஒரு புகைப்படம் இணையதளத்தில் வெளியானது.
தற்போது இப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர்கள் மத்தியில் பல கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன என பல வதந்திகளான செய்திகள் உலா வந்தாலும் உண்மை நட்பை அடையாளம் காட்ட இந்த மாதிரியான புகைப்படங்கள் வெளியே வருவது அழகு..
Facebook Comments