Spotlightசினிமா

தெலுங்கு பட இயக்குனரோடு கைகோர்த்த சிவகார்த்திகேயன்!

டிகர் சிவகார்த்திகேயனின் 20வது படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது. இப்படத்தினை தெலுங்கு பட இயக்குனர் அனுதீப் இயக்கவிருக்கிறார்.

மேலும், பல ப்ளாக் பஸ்டர் படங்களுக்கு இசையமைத்தவரும், தற்போது ஷங்கர் படத்திற்கு இசையமைத்து வரும் இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார்.

தெலுங்கில் காமெடி ஜார்னரில் எடுக்கப்பட்ட ஹிட் அடித்த “jathi ratnalu” என்ற படத்தினை இயக்கிய அனுதீப், தமிழில் சிவகார்த்திகேயன் மூலமாக அடியெடுத்து வைக்கிறார்.

இப்படமும் முழுக்க முழுக்க காமெடி படமாக எடுக்கவிருக்கிறார்கள். லண்டன் மற்றும் பாண்டிச்சேரியை மையப்படுத்தி கதை நகரவிருப்பதாக தெரிகிறது. இப்படம் எத்தனை மொழிகளில் உருவாக இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

எது எப்படியோ, தமிழ் சினிமாவை கடந்து தென்னிந்திய சினிமாவில் முகம் பதிக்க ஆரம்பித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். வாழ்த்துகள்.

Facebook Comments

Related Articles

Back to top button