
லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் தர்பார். அடுத்த வாரம் ஜனவரி 9ஆம் தேதி படம் ரிலீசாகவுள்ளது.
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை முருகதாஸ் இயக்கியுள்ளார்.
இப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியிட உள்ளதால் இதன் புரோமோசனில் தீவிர கவனம் செலுத்து வருகிறது லைகா.
இந்த நிலையில் இதன் தெலுங்கு பதிப்பு புரோமோசனுக்கு (PRE RELEASE EVENT) ரஜினி, முருகதாஸ், லைகா சுபாஷ்கரன், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் உள்ளிட்டோர் ஹைதராபாத் சென்றிருந்தனர்.
அந்த விழாவில் ரஜினிகாந்த் பேசும்போது…
”நீங்கள் எப்படி இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள்? என பலரும் கேட்கிறார்கள். அது… கொஞ்சமாக ஆசைப்படுங்கள், கொஞ்சமாக சாப்பிட்டுங்கள், கொஞ்சமாக தூங்குங்கள், கொஞ்சமாக உடற்பயிற்சி செய்யுங்கள், கொஞ்சமாக வருத்தப்படுங்கள், கொஞ்சமாக பேசுங்கள் இவ்வாறு இருந்தாலே சுறுசுறுப்பாக சந்தோசமாக இருக்கலாம்” என பேசினார் ரஜினி.
Super Star Rajini reveals his secret of energy