Spotlightசினிமா

சூர்யாவிற்கு வில்லனாகிறார் பாஜக எம் பி!

காப்பான் படத்திற்கு பிறகு சூர்யா நடிக்கும் அடுத்த படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தை சுதா கொங்காரா இயக்கி வருகிறார். சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

மிகப்பெரும் பொருட்செலவில் இப்படம் உருவாகி வருகிறது. ஏர் டெக்கான் நிறுவனர் ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.

ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு சண்டைக்காட்சிகளை வடிவமைக்கும் கிரேக்பவல் இந்த படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக இணைந்துள்ளார்.

சூர்யாவுக்கு அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்கிறார். ஏற்கனவே படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ஹிந்தி நடிகர் பரேஷ் ராவல் வில்லனாக நடிக்க இணைந்துள்ளார்.

பாலிவுட்டில் 80 களில் வெற்றிகரமான நடிகராக வலம் வந்தவரான பரேஷ் ராவல் தேசிய விருது பெற்ற நடிகர். பாஜகவை சேர்ந்தவரான இவர், 2014-2019வரை நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button