இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “விக்ரம்”. இப்படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடித்துள்ளனர்.
நேற்று இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் பல சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொணடு பேசினர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசும் போது, “சினிமாவிற்கு எதற்கு வந்தேனோ, அது நிறைவேறியது என்று தோன்றுகிறது. கமல் சாரை பார்த்து தான் சினிமா கற்றுக் கொண்டேன்.
அவரை வைத்தே படத்தை இயக்கி விட்டேன்.” என்று கூறினார். மேலும், இந்த விஷயம் யாருக்கும் தெரியக் கூடாது என்று இருந்தேன், அது தெரிந்து விட்டது., ஆம், இப்படத்தில் சூர்யா ஒரு சின்ன ரோல் செய்துள்ளார். சூர்யாவிற்கு ரொம்ப நன்றி.
உங்கள் எதிர்பார்ப்பை நான் இந்த படத்தில் பூர்த்தி செய்திருக்கிறேனா என்று தெரியவில்லை. சினிமாவிற்கு நான் உண்மையாக இருந்து இப்படத்தை இயக்கியிருக்கிறேன். ஆகையால், இப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.” என்று கூறினார்.