
சென்னையில், நேற்று மருத்துவர் ஒருவர் கொரோனாவால் இறந்த நிலையில், அவரது உடலை அடக்கம் செய்வதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிகழ்வு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ கொல்லும் கொரோனா கூட சாதி,மதம் பார்ப்பதில்லை. ஆனால் நாமோ,நம்மை காக்க போராடுபவர்களின் இறுதி காரியங்களில் கூட தன்னலம் பார்த்து,இறுதி மரியாதையை தடுப்பது அரக்க குணம்.
பாதுகாப்புக்கருவிகள் இல்லாமல்கூட தன்னுயிரைப் பொருட்படுத்தாத மருத்துவர்கள்தான் இப்போரில் நம் வணக்கத்துக்குரிய வீரர்கள்.’ என்று காட்டமாக தெரிவித்து இருக்கிறார்.
Facebook Comments





