Spotlightவிமர்சனங்கள்

மட்டி – விமர்சனம் 4/5

பிகே 7 கிரியேஷன்ஸ்  பட நிறுவனம் பிரேமா கிருஷ்ணதாஸ் சார்பில், டாக்டர் பிரகபல் இயக்கியுள்ள படம் “மட்டி”. முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்க ஆறு மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகி இருக்கிறது இப்படம்.
 
நாயகன் ரிதன், மலைப்பகுதியில் வெட்டப்படும் மரங்களை தனது ஜீப் காரில் ஏற்றி மலையடிவாரத்திற்கு கொண்டு வரும் வேலை செய்து வருகிறார். குடும்ப பிரச்சனையின் காரணமாக தனது தம்பி கார்த்தியுடன் பல வருடங்களாக பேசாமல் இருந்து வருகிறார்.
 
தம்பியாக வரும் கார்த்தி, கல்லூரியில் படிக்கும் போது வில்லனை சந்திக்கிறார். மட்டி ரேஸில் வில்லனை தோற்கடிக்கிறார் கார்த்தி.
 
மட்டி ரேஸ் என்பது ஜீப் காரில் மலைப்பகுதியில் நடத்தப்படும் ஒரு வகையான கார் பந்தயம். 
 
பல வருடங்கள் கழித்து கார்த்தியை சந்திக்கும் வில்லன், கார்த்தியோடு மோதுகிறார். இச்சமயத்தில் தான் தம்பியைக் காப்பாற்ற தம்பியோடு கைகோர்க்கிறார் நாயகன் ரிதன்.
ரேஸில் வில்லனை இருவரும் தோற்கடித்தார்களா .? இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
 
நாயகன் ரிதன் மற்றும் கார்த்தி இருவருக்கும் சரிசமமான காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் ரிதன் மிரட்டியெடுத்திருக்கிறார். 
 
படப்பிடிப்பு முழுவதும் மலைப்பகுதியில் நடைபெறுவதால், அதில் காரை ரிஸ்க் எடுத்து ஓட்டியதையெல்லாம் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். ரிதன் , கார்த்தி இருவரும் தனது முதல் படம் போல் என்றில்லாமல் அசத்தியிருக்கிறார்கள்.
 
படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றையும் பிரம்மாண்டபடுத்தி இயக்கியிருக்கிறார் இயக்குனர் பிரகபல். ஆங்காங்கே காமெடி காட்சிகளிலும் ஸ்கோர் செய்திருக்கிறார் இயக்குனர். 
இப்பிரம்மாண்டத்திற்கு மேலும், பிரம்மாண்டம் ஏற்றியிருப்பது ஒளிப்பதிவு. ஒவ்வொரு காட்சியிலும் எடுக்கப்பட்ட ரிஸ்க்குகள் அனைத்தும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கே ஜி ரதீஷ்.  ஒரு ஹாலிவுட் தரத்திற்கு காட்சியமைப்பினை கொடுத்திருகிறார் ரதீஷ்.
கே ஜி எப் படத்தின் இசையமைப்பாளரான ரவி பஸ்ரூர்  இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கே ஜி எப் -ல் கொடுக்கப்பட்ட அதே மிரட்டலான இசையை இதிலும் கொடுத்திருக்கிறார். 
 
படத்திற்கு மற்றுமொரு பக்கபலம் என்றால் அது வசனங்கள் தான். ஆர் பி பாலாவின் வசனங்கள் பெரிதும் கைகொடுத்திருக்கின்றன.  
 
படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் படம் பார்க்கும் ரசிகர்களை கண்களை விரிய வைத்தும், சீட்டின் நுனியில் அமர வைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. உலகத் தரத்தில் ஒரு உள்ளூர் சினிமா என்பது போல் பல வருடங்கள் இப்படத்திற்காக உழைத்த உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. 
 
பிரம்மாண்டம் வித்தியாசம் என்றாலே ஹாலிவுட் தான் என்ற பார்வை கண்ணோட்டத்தை முற்றிலுமாக உடைத்திருக்கிறார் இயக்குனர்.
 
காட்சியமைப்பின் மிரட்டல்கள் நிச்சயம் ரசிகர்களை எந்த விதத்திலும் ஏமாற்றமடைய வைக்காது. 
 
மட்டி – மலைக்க வைக்கும் வேகம்..  
Facebook Comments

Related Articles

Back to top button