Spotlightவிமர்சனங்கள்

தலைவி – விமர்சனம் 3.25/5

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி இருக்கிறது “தலைவி”.இப்படத்தை இயக்குனர் விஜய் இயக்கியிருக்கிறார்.

ஜெயலலிதாவாக கங்கனா ரெனாவத் நடித்திருக்கிறார். எம் ஜி ஆர்-ஆக அரவிந்த்சாமி நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவிற்குள் ஹீரோயினாக அறிமுகமாகி, தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு, சினிமாவில் முன்னனி நாயகியாக வலம் வந்து, அதிமுக-வில் உறுப்பினராக இணைந்து, எம் ஜி ஆர்-க்குப் பிறகு தனி ஒரு தலைவியாக அதிமுக இயக்கத்தை ஆளுமை செய்தார் ஜெ ஜெயலலிதா.

முதல் பாதியில், ஜெயலலிதா சினிமாவிற்குள் எப்படி உள்ளே நுழைந்தார். அந்த காலகட்டத்தில் சினிமாவில் நிலைத்திருக்க என்னவெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை வெளிச்சமாக காட்டியிருக்கிறார் இயக்குனர் விஜய்.

எம் ஜி ஆரின் வலது கரமாக ஜெயலலிதாக எப்படி மாறினார் என்பதையும் வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.

சமுத்திரக்கனி அதிமுக-வில் மிகப்பெரும் தலைவராக இருந்த ஆர் எம் வீரப்பன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வில்லத்தனத்தில் வித்தியாசத்தை காண்பித்திருக்கிறார்.

கலைஞர் கருணாநிதியாக நாசர் என பலரும் தங்களக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்.

ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ஜொலித்திருக்கிறார். எம் ஜி ஆர் வேடத்தில் அரவிந்த் சாமி நடித்திருக்கிறார்., முதலில் ஏற்றுக்கொள்ள மனம் இல்லாவிட்டாலும் படம் போக போக எம் ஜி ஆர் -ஆக தனது உச்ச நடிப்பை கொடுத்திருக்கிறார் அரவிந்த்சாமி.

வாழ்க்கை வரலாறு படமாக எடுத்தால், அதில் உண்மைகள் அனைத்தையும் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், இயக்குனரோ நிறைகளை கொஞ்சம் அதிகமாகவே தூவிவிட்டிருக்கிறார். அதில் சற்று ஏமாற்றம் தான்.

பின்னனி இசையில் ஜி வி பிரகாஷ் குமார் மிரட்டலை கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு காட்சிக்கும் உயிரோட்டத்தை கொடுத்திருக்கிறார்.

விஷாலின் ஒளிப்பதிவு கலர் பஃபுல்

தலைவி – ஏற்றுக் கொள்ளலாம்…

Facebook Comments

Related Articles

Back to top button