Spotlightசினிமா

தொடர்ந்து ரஜினியை வம்புக்கிழுக்கும் தாதா 87 இயக்குனர்!

தமிழ் சினிமாவில் திருநங்கைகளின் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் கொண்டு வெளிவந்த படம் தான் தாதா 87. இப்படத்தினை விஜய் ஸ்ரீ ஜி இயக்கியிருந்தார்.

இப்படத்திற்கு பிறகு தற்போது ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ (பப்ஜி) என்ற படத்தை இயக்கி வருகிறார்

இப்படத்தின் மோஷன் போஸ்டர் நாளை மாலை வெளியாகவுள்ளது. இதே நாளில் தான் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியாகவுள்ளது.

ஏற்கனவே, தாதா 87 படத்தின் போஸ்டர் , டீசர், ட்ரெய்லர் என அனைத்தும் ரஜினி நடிப்பில் வெளியான ‘காலா’ படத்தின் போஸ்டர், டீசர், ட்ரெய்லர் வெளியான நாட்களில் வெளியிட்டு பெரும் பரபரப்பை கிளப்பியவர் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி.

அதே பரபரப்பை பப்ஜி படத்திற்கும் கிளப்ப தற்போது தயாராகி வருகிறார் இயக்குனர்.

Facebook Comments

Related Articles

Back to top button