Spotlightசினிமா

கல்யாண் மீது பாலியல் புகார்.. அசிங்கப்பட்ட சின்மயி!!

நடன உலகில் தனக்கென்று ஒரு முத்திரை பதித்து வைத்திருப்பவர் டான்ஸ் மாஸ்டர் கல்யாண். இவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் ஒருவர் கூறியதாக கூறி சில தினங்களுக்கு முன் பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

சின்மயியின் ட்வீட்டுகளால் என்ன நடக்கிறது என்பதை பார்க்க காரணமே இல்லாமல் கல்யாண் மாஸ்டர் மீது புகார் தெரிவித்தது நான் தான். உங்களின் பெயரை பயன்படுத்தியதற்காக சாரி என்று ஒருவர் ட்வீட்டியதை கல்யாண் ரீட்வீட் செய்துள்ளார்.

தனக்கு வரும் மெசேஜ்களை எந்த கேள்வியும் கேட்காமல் அப்படியே போஸ்ட் செய்கிறார் சின்மயி. அதனால் அவரின் ஆதாரமற்ற ட்வீட்டுகளை நம்ப வேண்டாம். ஆண்களை அசிங்கப்படுத்த பெண்ணியவாதிகள் இந்த மீ டூ டிரெண்டை பயன்படுத்துகிறார்கள் என்று கல்யாண் மாஸ்டர் மீது புகார் தெரிவித்த நபர் ட்வீட்டியுள்ளார்.

கல்யாண் மாஸ்டர் மீது பொய்யான தகவல் பரவுகிறது. இதை ஏற்க முடியாது என்று சின்மயி ட்வீட்டினார். இதை பார்த்த அந்த நபர், நீங்கள் தான் அவர் பற்றி வந்த ட்வீட்டை சோஷியல் மீடியாவில் போஸ்ட் செய்தது. உங்களின் புகார்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக உள்ளது. நீங்கள் தான் அதற்கு பொறுப்பு. என் கடமை என்பதால் உண்மையை சொன்னேன். அப்பாவிகள் தண்டிக்கப்படக் கூடாது என்கிறார்.

தன்னை விளம்பரபடுத்திகொள்ளவும் ஆண்கள் மீது உள்ள காழ்புணர்ச்சி தான் தேவை இல்லாமல் பல பிரபலங்கள் மீதும் யார் எது சொன்னாலும் முந்தி கொண்டு தனது ட்விட்டரில் தேவை இல்லாத பதிவுகளை போட்டு பலரின் குடும்பத்தோடு விளையாடுகிறார்.

இவர் செய்யும் தேவை இல்லாத பிரச்சனைகள் பலர் குடும்பத்தில் பிரச்சனைகள் உண்டுபண்ணுகிறது ஏன் கவிஞர் வைரமுத்து விஷயம் கூட ஐந்து வருடங்கள் முன் நடந்த விஷயத்தை ஏன் இப்போது வெளியுலகத்துக்கு சொல்லவேண்டும் பின் ஏன் அவரின் கல்யாணத்துக்கு கவிஞரை அழைக்க வேண்டும் இவரின் பாப்புலாரிட்டிக்கு பலரின் குடும்பம் பழிவாங்க வேண்டுமா? என்று நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Facebook Comments

Related Articles

Back to top button