Spotlightசினிமா

சாரிங்க… மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது – ரஜினிகாந்த்!

சென்ற வாரம் சென்னையில் நடைபெற்ற துக்ளக் 50 ஆண்டு விழாவில் ரஜினி பேசிய சில பேச்சு சர்ச்சையானது.

இதில், பெரியார் பற்றிய பேச்சுக்கு ரஜினி மீது தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இல்லை என்றால் அவரது வீடு முற்றுகை இடப்படும் என தந்தை பெரியார் திராவிட கழகம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று ரஜினியின் வீடு இருக்கும் போயஸ் கார்டனை சுற்றி முற்றுகை போராட்டம் நடைபெறவிருந்த நிலையில், சற்று முன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ரஜினிகாந்த்.

அவர் பேசியதாவது…

பெரியார் பற்றி நான் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது.

1971ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தையே பேசினேன், கற்பனையாக பேசவில்லை.

பத்திரிகைகளில் வந்த செய்தி அடிப்படையிலேயே நான் பேசினேன்.” என அதிரடியாக பேட்டியளித்துள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button