
பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3யில் நாளுக்கு நாள் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்தவாரம் எலிமினேஷனில் சாக்ஷி, லாஸ்லியா, அபிராமி மற்றும் சரவணன் நாமினேட் ஆன நிலையில் சரவணன் வார ஆரம்பத்திலேயே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.
இந்நிலையில், மீதமிருக்கும் சாக்ஷி, லாஸ்லியா மற்றும் அபிராமி மூவரில் ஒருவர் இந்த வீட்டை விட்டு வெளியேறவிருக்கிறார்.
நடைபெற்ற ஓட்டு கணக்கில் லாஸ்லியா அதிக ஓட்டுகளை பெற்றுள்ளார், அதற்கு அடுத்தபடியாக அபிராமியும், கடைசியாக சாக்ஷியும் இருக்கிறார்கள்.
மிகக் குறைந்த வாக்குகளை பெற்ற சாக்ஷி இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
Facebook Comments



