Spotlightசினிமா

பிக் பாஸ் வீட்டிற்குள் சனம் ஷெட்டி… ரசிகர்களின் மனதை கொள்ளையடிப்பாரா.?

தம் கதம், மாயை, சவாரி, உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் தான் சனம் ஷெட்டி.

கடந்த முறை பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த தர்ஷனுக்கும் இவருக்கும் காதல் மலர்ந்தது. நிச்சயதார்த்தமும் ஆனது. பின், இவர்களுக்குள்ளான காதல் முறிந்து, திருமணம் தடையானது.

சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான சனம் ஷெட்டி, சமூக ஆர்வலரும் கூட. கொரோனா ஊரடங்கு சமயங்களில் யாருக்கும் தெரியாமல் பல உதவிகளை சத்தமே இல்லாமல் செய்து வருகிறார்.

சாலையோரம் வசிக்கும் ஏழை மக்களுக்கு அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை செய்து வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், இந்த வருட பிக் பாஸ் நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி கலந்து கொள்ளவிருக்கிறார். பல ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் சனம் ஷெட்டி பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று உலக சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பாரா..?? பார்க்கலாம்…

Facebook Comments

Related Articles

Back to top button