Spotlightவிமர்சனங்கள்

யாரு போட்ட கோடு – விமர்சனம் 3.25/5

ழுத்து & இயக்கம்: லெனின் வடமலை

நடிகர்கள்: பிரபாகரன், மேஹாலி மீனாட்சி, லெனின் வடமலை, துகின் சே குவேரா, வினிதா கோவிந்தராஜன்

இசை: செளந்தர்யன் மற்றும் ஜெயக்குமர்

தயாரிப்பு: டீச்சர்ஸ் ஸ்டிக் ப்ரொடக்‌ஷன் டாக்டர். வினிதா கோவிந்தராஜன்

கதைப்படி,

அது ஒரு அழகிய கிராமம். பல சாதிகள் அடங்கிய கிராம மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர். அதில் ஒரு சிலர் சாதிகளை வைத்து மேலிருப்பவன் கீழேயிருப்பவன் என்று பிரித்து பார்க்கின்றனர்.

அந்த கிராமத்தில் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றுகிறார் நாயகன் பிரபாகரன். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரிடத்திலும் நல்லதொரு பண்பையும், அரசியலையும், சமூக மான்பையும் கற்றுக் கொடுக்கிறார் பிரபாகரன்.

அதே ஊரில் மதுபானக் கடையில் பார் ஒன்றை நடத்தி பல லட்சங்களை சம்பாதித்து வருகிறார் வில்லனான லெனின் வடமலை. மதுபானக் கடையை எதிர்த்து பள்ளி மாணவர்களை போராட வைத்து, அதனை மூட வைத்து விடுகிறார் பிரபாகரன். இதனால், லெனின் வடமலைக்கு பொருளாதார சிக்கல்கள் ஏற்பட, பிரபகாரனை பழி வாங்க துடிக்கிறார் லெனின் வடமலை.

இந்நிலையில், அதே பள்ளியில் டீச்சராக பணிக்கு சேர்கிறார் மேஹாலி. மேஹாலிக்கு பிரபாகரன் மீது காதல் ஏற்பட, நாளடைவில் பிரபாகரனுக்கும் மேஹாலி மீது காதல் வருகிறது.

அதே சமயம், மேஹாலிக்கு ஏற்கனவே திருமணமானவராக இருக்கிறது. இந்த செய்து லெனின் வடமலைக்கு தெரியவர, இதை வைத்து பிரபாகரனை பழி வாங்க திட்டம் தீட்டுகிறார் லெனின் வடமலை. இறுதியில் என்ன நடந்தது என்பது படத்தின் மீதிக் கதை.

நாயகன் பிரபாகரன் தனது வசனத்தால் வாளை எடுத்து சுழட்டியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு காட்சியிலும் சமூக நீதி குறித்தும் மக்களிடத்தில் கொடுக்கப்படும் விழிப்புணர்வு குறித்தும் பேசும் ஒவ்வொரு வசனங்களும் கைதட்ட வைத்திருக்கின்றன. அன்பான முகத்தால் அனைவரையும் வெகுவாகவே கவர்ந்திருக்கிறார் பிரபாகரன்.

நாயகியான மெஹாலி அழகு தேவதையாக வந்து செல்கிறார். வில்லனான லெனின் வடமலை மிரட்டலான ஒரு நடிப்பைக் கொடுத்திருக்கிறார். படத்தில் தோன்றிய முதல் காட்சியிலேயே வில்லன் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் ஒரு நினைப்பை அனைவரிடத்திலும் வர வைத்துவிட்டார்.

கீழ் சமூகத்தைச் சார்ந்தவரை அடிக்கும் போது, லெனின் வடமலையின் கை அவர் மீது பட்டுவிட்டது என்பதற்காக கைகழுவும் காட்சி, இரத்தம் பட்டதற்காக கைகழுவும் காட்சி, கீழ் சமூகத்திலிருப்பவர்களிடம் பழகக் கூடாது என்று தன் மகனை கண்டிப்பது என தனக்கான கதாபாத்திரத்தை மிரட்டலாக செய்துவிட்டார் லெனின் வடமலை.

அருமையான கதையை கையில் எடுத்த இயக்குனர் அதனை திறம்பட கையாண்டு திரைக்கதையாக மாற்றி நல்லதொரு திரைமொழியாக படைப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் லெனின் வடமலை. சமூகத்தில் இன்றளவும் நடக்கும் அநீதிகளை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குனர். இதற்காகவே இயக்குனருக்கு பெரிதும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்ளலாம்., காட்சிகளை இன்னும் கமர்ஷியலாக படைத்திருக்கலாமோ என்ற சின்ன குறைபாட்டினைத் தவிர படத்தில் பெரிதாக எந்த குறையும் எட்டிப் பார்க்கவில்லை. சாமி எல்லாருக்கும் சமம் தான் என்று சிறுவன் பேசுவது, சடலத்தை ஊருக்குள் எடுத்துட்டு போகும் காட்சியில் பிரபாகரன் பேசுவது, உணவு அரசியல், நீட் அரசியல், என பல கூர்மையான வசனங்கள் நெஞ்சை பதம் பார்த்துவிடுகின்றன.

அதுமட்டுமல்லாமல், பள்ளி மாணவர்களை எதிர்காலத்தில் அவர்களின் கனவை வைத்து அவர்களை அழைப்பதென்பது தமிழ் சினிமாவில் கேட்டிடாத ஒன்று… பாராட்டுக்குறியது.

என்னோட கூட்டாளி நீ தான் என்ற பாடல் கேட்பதற்கு ரகம் தான். பின்னணி இசையும் கதையோடு பயணப்பட்டு ரசிக்க வைத்திருக்கிறது.

ஒளிப்பதிவு காட்சிகளை அழகூற கொடுத்திருக்கிறது. ஒளிப்பதிவாளருக்கும் வாழ்த்துகள்.

யாரு போட்ட கோடு – விழிப்புணர்வு தான்.

Facebook Comments

Related Articles

Back to top button