Spotlightசினிமாதமிழ்நாடு

2021 ல் வெற்றி உறுதி… வியூகங்களை வகுத்த ரஜினி; எக்ஸ்க்ளூசிவ் அப்டேட் !!

மும்பையில் தர்பார் படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார் ரஜினிகாந்த்…

சில வருடங்களுக்கு முன் நான் அரசியலுக்கு வருவது உறுதி. என்று கூறியிருந்தார்.. அதனையடுத்து தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றியிருந்தார்..

தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் மன்றத்தின் காவலர்கள் பொதுமக்களுக்கு தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகின்றனர்.

நமது இலக்கு 2021ல் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தல் தான் என்று தனது மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் கூறியிருக்கிறார்…

அடுத்த வருட இறுதியில் மதுரை அல்லது திருச்சியில் மிகவும் பிரம்மாண்டமான மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார் ரஜினி..

இந்நிலையில், மும்பையில் பிரசாந்த் கிஷோர் என்பவரை சந்தித்து பேசியிருக்கிறார். இந்த சந்திப்பு சில மணி நேரங்கள் தொடர்ந்திருக்கிறது..

அண்மையில் மத்தியில், பிரதமர் மோடி ஆட்சி அமைக்கவும், பீஹாரில், முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆட்சி அமைவதற்கும், ஆந்திர சட்டசபை தேர்தலில், ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெறவும், இந்த பிரசாந்த் கிஷோர் தான் பின்னணியில் இருந்தார்.

தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சி தலைவர்கள் அணுகியுள்ளனர். குறிப்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் நடிகர் கமல் ஆகியோர், ஏற்கனவே, பிரசாந்த் கிஷோரிடம் பேச்சு நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button