Spotlightசினிமா

தமிழர்களின் வீரமாம் கபடி; பறை கொட்ட வருகிறது ‘கென்னடி கிளப்’!

சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார், பாரதிராஜா நடிக்க உருவாகியுள்ளது ‘கென்னடி கிளப்’.

இப்படத்தினை நல்லுசாமி பிக்சர்ஸ் தயாரிக்க ஸ்கிரீன் சீன் நிறுவனம் வெளியிடுகிறது.

ஏற்கனவே, பாடல்களில் ஆரம்பித்து டீசர், ட்ரெய்லர் என அனைத்தும் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழர்களின் வீர விளையாட்டாம் கபடி. அதை முன்னிலைப்படுத்தி இப்படத்தினை உருவாக்கியுள்ளார் சுசீந்திரன். அதிலும் பெண்களுக்கான கபடி போட்டி என்பதால் பெண்ணடிமை, பெண் உரிமை, அவர்களுக்கான சுதந்திரம், என அனைத்தும் இப்படத்தில் பேசப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 22 ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

Facebook Comments

Related Articles

Back to top button