Spotlightசினிமா

’பிகில்’ அடிக்கும் தளபதி… தெறிக்க விடும் ரசிகர்கள்!

ட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வருகிறது ‘தளபதி 63’. படத்தின் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லீயோடு விஜய் கைகோர்க்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், விவேக், யோகிபாபு, கதிர், என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

படத்தினை மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது ஏ ஜி எஸ் நிறுவனம். கால்பந்தை மையப்படுத்தி இக்கதை நகர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சில நிமிட துளிகளுக்கு முன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியிடப்பட்டது.

படத்தினை டைட்டிலை ‘பிகில்’ என வைத்துள்ளனர். தளபதியின் ரசிகர்கள் அசால்ட்டாக ட்விட்டரை தெறிக்க விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

உலக அளவில் பிகில் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button