Spotlightசினிமா

நடிகர் நடிகைகளின் சம்பளம் உயருவது குறையுமா? தமிழ் சினிமாவில் புதிதாக உருவாகியிருக்கும் சங்கம்!

திரைப்படங்களின் கதையின் கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடிகர் நடிகைகளை வழங்கி வந்த கேஸ்டிங் டைரக்டர்கள் எனப்படும் நடிப்பு இயக்குனர்கள், தென்னிந்தியாவில் ஒன்றிணைந்து ‘தென்னிந்திய திரைப்பட நடிப்பு இயக்குனர்கள் மற்றும் நட்சத்திர மேலாளர்கள் சங்கத்திணை’ தங்களுக்கென உருவாக்கியுள்ளனர்.

மேலும் இச்சங்கத்தில் முன்னணி திரை நட்சத்திரங்களுக்கு மேலாளராக பணியாற்றுபவர்கள் இதில் ஒரு அங்கமாக உள்ளனர். இச்சங்கமானது வரும் காலங்களில் திரைத்துறையில் புதிதாய் வாய்ப்பு தேடுவோர் மற்றும் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளர் ஆகியோருக்கு ஒரு நல்ல உறுதுணையாக அமையும் என தெரிவித்துள்ளனர்.

இதனை வழி நடத்த திரைத்துறையின் ஜாம்பவான்களான நடிகர் மற்றும் இயக்குனர் திரு கே.பாக்யராஜ் அவர்கள் கௌரவ வழிகாட்டியாகவும், கௌரவ ஆலோசகர்களாக இயக்குனர் பிரபு சாலமன், தயாரிப்பாளர் சத்யஜோதி பிலிம்ஸ் திரு. டி ஜி தியாகராஜன், நடிகை ‘ஊர்வசி’ அர்ச்சனா மற்றும் மக்கள் தொடர்பாளர் திரு டைமண்ட் பாபு ஆகியோர் இச்சங்கத்தில் இணைந்துள்ளனர்.

இச்சங்கத்தின் தலைவராக திரு மனோஜ் கிருஷ்ணா, செயலாளராக ஜெனிஃபர் சுதர்சன், பொருளாளராக வேல் ராஜன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன் துவக்கவிழா சென்னை சாலிகிராமத்தில் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

விழாவில் நடிகர் நாசர் பேசும்பொழுது நடிக்க வாய்ப்பு தேடுகிறவர்களுக்கும் , நடித்துக்கொண்டிருப்பவர்களுக்கும் மேனேஜர்கள் மிக அவசியம் , அப்படிப்பட்ட மேனேஜர்கள் யூனியனாக செயல்படுவது தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். நடிகர்களுக்கும், தயாரிப்பு நிறுவங்களுக்கும் பாலமாக இருப்பவர்கள் , அதுபோல கேஸ்ட்டிங் டைரக்டர் பணி தமிழ் சினிமாவில் இன்னும் முக்கியத்துவமானதாக இல்லை , இனி அந்த வேலையும் முக்கியமானதாக இருக்கும். இந்த சங்கத்தினருக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு என்கிறார் .

விழாவில் நடிகர் நாசர், பாக்யராஜ், ராதாரவி, அஸ்வின், அசோக், கவுதமி, தேஜாஸ்ரீ, நமீதா, சாக்‌ஷி அகர்வால், அர்ச்சனா, உள்ளிட்ட திரைத்துறை நடிகர் நடிகைகள் பலர் விழாவில் கலந்துகொண்டனர்.

Facebook Comments

Related Articles

Back to top button