Spotlightதமிழ்நாடு

கையெழுத்தானது அதிமுக – பாஜக கூட்டணி உடன்பாடு!

மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிர முயற்சிகள் ஈடுபட்டுவருகின்றன. இந்நிலையில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க காலையில் இணைந்த நிலையில் பா.ஜ.கவும் சேர்ந்துள்ளது.

பா.ஜ.கவின் தமிழக பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், முரளிதரராவ், தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்டோருடன் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் தனியார் விடுதியில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதன் இறுதிக்கட்டமாக அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.கவிற்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மோடியை மீண்டும் பிரதமராக்க அ.தி.மு.கவுடன் பா.ஜ.க மெகா கூட்டணி அமைத்துள்ளது. முன்னதாக காலையில் பா.ம.கவிற்கு 7 அ.தி.மு.க இடங்கள் ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.

பாஜக-விற்கு சுமார் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், தேமுதிக-வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Facebook Comments

Related Articles

Back to top button