Spotlightசினிமா

பேட்ட 10.. விஸ்வாசம் 14..???

ரஜினியின் ’பேட்ட’யுடன் அஜித்தின் ‘விஸ்வாசம்’ வருவதை சன் குழுமம் விரும்பவில்லை என்றே தெரிகிறது. விஸ்வாசம் படத்துக்கு தியேட்டர்கள் கிடைத்து விட்டாலும் இன்னும் ரிசர்வேஷனை தொடங்கவில்லை.

தியேட்டர் வட்டாரத்தில் விசாரித்தால் இன்னமும் உறுதியான தேதி வரவில்லை, ஆனா பொங்கலுக்கு ரிலீஸ் கன்பார்ம் என்று செய்தி கூறப்பட்டுள்ளதாம். அதாவது 14 ஆம் தேதிக்கு படம் வெளிவரலாம் என்று தெரிகிறது.

தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் பத்தாம் தேதியில் ரிலீஸ் ஆவதற்கு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். பேட்டயுடன் விஸ்வாசம் வந்தால் தங்களுக்கு வசூல் பாதிக்கப்படும் என்று பேட்ட தயாரிப்பு நிறுவனம் நினைக்கிறது என தெரிகிறது.

இன்று மாலைக்குள் உறுதியான தேதி அறிவிக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது…

Facebook Comments

Related Articles

Back to top button