Spotlightதமிழ்நாடுவிளையாட்டு

விழிப்புணர்வுக்காக தூத்துக்குடியில் நடைபெறும் மாபெரும் ‘மைக்ரோ மாரத்தான்’ !

ட்டப்பந்தயம் என்றாலே விளையாட்டு வீரர்களுக்கு ஒரு புத்துணர்ச்சி போன்றுதான்… அதிலும் மாரத்தான் என்றால் சொல்லவே வேண்டாம்.. தங்களை முன்னிறுத்துவதிலும், தங்களை அடையாளப்படுத்துவதிலும், தங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவதிலும் வீரர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாகவே இந்த ‘மாரத்தான்’ போட்டி பார்க்கப்படும்.

அப்படியாக இதை போட்டியாக மட்டுமல்லாமல், இரத்தம் மற்றும் உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வுக்காக தூத்துக்குடியில் மாபெரும் ‘மைக்ரோ மராத்தான்’ நடைபெறவிருக்கிறது.

இதை ‘OBOTAP’ என்ற நிறுவனம் சார்பில் நடத்தப்படவிருக்கிறது. ஒரு லட்சம் வரையில் பண பரிசு இதில் வழங்கப்படவிருக்கிறது. வரும் 30ஆம் தேதி இப்போட்டி தூத்துக்குடியில் நிகழவிருக்கிறது.

இப்போட்டியில் சுமார் 500க்கும் மேலாக வீரர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

மேலும் தகவல்களுக்கு: www.thoothukudimarathon.com
contact Number: 97888 13666

Facebook Comments

Related Articles

Back to top button