Spotlightசினிமாவிமர்சனங்கள்

தமிழரசன் – விமர்சனம் 3/5

யக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன், சுரேஷ்கோபி, ராதாரவி, சோனு சூட் , ஒய்.ஜி.மகேந்திரன்,யோகிபாபு, ரோபோ சங்கர், விவன், கஸ்தூரி , சங்கீதா , சாயாசிங், மதுமிதா கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், சென்ட்ராயன், கும்கி அஸ்வின்,மேஜர் கவுதம், சுவாமி நாதன், முனீஸ்காந்த், ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன், மாஸ்டர் பிரணவ் என நட்சத்திர பட்டாளங்கள் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் தமிழரசன்.

கதைப்படி,

ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக வருகிறார் விஜய் ஆண்டனி. இவரது மனைவியாக வருகிறார் ரம்யா நம்பீசன். இவர்களுக்கு பத்து வயதில் மாஸ்டர் பிரணவ் மகனாக வருகிறார்.

மகன் பிரணவிற்கு இதயத்தில் கோளாறு ஏற்பட, உடனே ஆப்ரேஷன் செய்து வேறு ஒரு இதயத்தை வைத்தால் மட்டுமே மகனை காப்பாற்ற முடியும் என்கிறது தனியார் மருத்துவமனை. அதற்கு 70 லட்சம் வரை செலவாகும் என்கிறது தனியார் மருத்துவமனை.

இதனால் உடைந்து போகும், விஜய் ஆண்டனி சிறிது பணத்தை கட்டிவிட்டு உடனே ஆப்ரேஷன் செய்யுங்கள் என்று கூறுகிறார். ஆனால், மீதிப் பணத்தை கட்டினால் மட்டுமே அறுவை சிகிச்சை செய்வோம் என்கிறார்கள் மருத்துவமனை நிர்வாகிகள்.

இதனால் கோபம் கொண்டு, அந்த தனியார் மருத்துவமனையை தனது துப்பாக்கி முனையால் முடக்குகிறார் விஜய் ஆண்டனி.

அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகனாக விஜய் ஆண்டனி, கதை முழுவதையும் தன் தோளில் சுமக்கிறார். மகனைக் காப்பாற்ற ஒரு தந்தை எந்த எல்லை வரைக்கும் செல்வான் என்பதை கண் முன்னே நிறுத்தியிருக்கிறார் விஜய் ஆண்டனி.

தாயாக கண்ணீரை சுமந்து கொண்டு திரிகிறார் ரம்யா நம்பீசன். படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் தங்களுக்கான கேரக்டரை நேர்த்தியாக செய்து முடித்திருக்கிறார்கள்.

ராதாரவி, சங்கீதா, சோனு சூட் அனைவரும் கதாபாத்திரமாகவே மாறி வலு ஏற்றியிருக்கிறார்கள்.

படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் மருத்துவராக வரும் சுரேஷ் கோபி, கண்களில் ஈரம் எட்டிப் பார்க்க வைத்து விடுகிறார்.

மருத்துவமனையில் நடக்கும் சில பல தில்லுமுள்ளுகளை எடுத்துக் காட்ட முயற்சித்திருக்கிறார் இயக்குனர் பாபு யோகேஸ்வரன். கதையில் முக்கியத்தும் காட்டியிருக்கும் இயக்குனர், சற்று திரைக்கதையிலும் முக்கியத்துவம் காட்டியிருந்திருக்கலாம்.

ஒரு கட்டத்திற்கு மேல், எஸ் ஏ சி இயக்கத்தில் வெளிவந்த நெஞ்சிருக்கும் வரை என்ற படத்தின் போக்கு போல் தமிழரசன் தெரியும்.

ஆனால், உண்மை என்னவென்றால் ஹாலிவுட்டில் 2002 ஆண்டு வெளிவந்த John Q என்ற படத்தின் கதையை வைத்து தான் எஸ் ஏ சி “நெஞ்சிருக்கும் வரை” படத்தினை இயக்கியிருந்தார்.

ஜான் க்யூ படத்தின் உரிமையை அதிகாரப்பூர்வமாக பெற்றிருந்தவர் தயாரிப்பாளர் பெப்சி சிவா. John Q படத்தின் உரிமையை பெற்று தான் தமிழரசனை உருவாக்கியிருக்கின்றனர் படக்குழுவினர்.

எதுவாகியினும், மகனைக் காப்பாற்றும் ஒரு தந்தையின் போராட்டம் வலி மிகுந்தது தானே. படம் பார்க்கும் போது அந்த வலியை நம்மில் பாய்ச்சும் திறமை இயக்குனர் பாபு யோகேஸ்வரனிடம் இருந்தது.

இசைஞானி இளையராஜாவின் பின்னணி கதையின் ஓட்டத்திற்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது. ஒரு பாடல் கேட்கும் ரகம்.

ஆர் டி ராஜசேகரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

மொத்தத்தில் தமிழரசன் – மகனைக் காப்பாற்றத் துடிக்கும் தகப்பனின் போராட்டம்.

ஒளிப்பதிவு – ஆர்.டி.ராஜசேகர்
இசை – இளையராஜா
பாடல்கள் – பழனிபாரதி, A.R.P ஜெய்ராம்
கலை – மிலன்
ஸ்டண்ட் – அனல் அரசு
எடிட்டிங் – புவன் சந்திரசேகர்
நடனம் – பிருந்தா, சதீஷ்.
மக்கள் தொடர்பு – மௌனம் ரவி, மணவை புவன்.
தயாரிப்பு – கெளசல்யா ராணி
கதை திரைக்கதை வசனம் இயக்கம் – பாபு யோகேஸ்வரன்

Facebook Comments

Related Articles

Back to top button