Spotlightசினிமா

மார்ச் 14ஆம் தேதி திரைக்கு வருகிறது “மாடன் கொடை விழா”

தேவா ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் கேப்டன். சிவபிரகாசம் உதயசூரியன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “மாடன் கொடை விழா”.

இப்படத்தில், கோகுல் கெளதம், ஷாருமீஷா, சூரிய நாராயணன், சூப்பர் குட் சுப்ரமணி, ஸ்ரீ ப்ரியா உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

ஆர் தங்கபாண்டி படத்தினை இயக்கியிருக்கிறார். சின்ராஜ் ஒளிப்பதிவில் விபின் “மாடன்” படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

தமிழகத்தின் தென்பகுதிகளில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கியிருக்கிறது படக்குழு.

தென் தமிழகத்தில் அதிகமாக வணங்கக்கூடிய சுடலைமாட சுவாமி குறித்த படம் இதுவாகும்.

இப்படத்தினை தமிழகமெங்கும் ஸ்ரீ தேணாண்டாள் பிலிம்ஸ் சார்பில் என் ராதா & இராம நாராயணன் வெளியிடுகின்றனர்.

படத்தின் டீசர் பத்து நாட்களுக்கு முன் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் அமோக வரவேற்பைப் பெற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button