
ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ், க்ரித்தி சனோன், பிரியன்ஷு பெயின்யூலி, பிரகாஷ்ராஜ், புஷ்பராக் ராய் சவுத்ரி, பரம்வீர் சிங் சீமா, விரேன் பார்மன், மகம்மது ஷீஷ்ஷான், சித்தரஞ்சன் திரிபாதி, உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் தேரே இஷ்க் மேய்ன்.
படத்தினை தயாரித்திருக்கிறார்கள் பூஷன் குமார், கிருஷ்ணன் குமார், ஆனந்த் எல் ராய், ஹிமான் ஷு வர்மா. இசையமைத்திருக்கிறார் ஏ ஆர் ரகுமான். ஒளிப்பதிவு செய்திருக்கிறார் துஷார் காந்தி ராய்.
சின்ன சின்ன சண்டை செய்து அடாவடியாக சுற்றித் திரிபவர் தான் தனுஷ். இஷ்டம் போல் தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். ஹீரோயின் க்ரித்தி தனுஷை சந்தித்து உன்னை நல்லவனாக மாற்றுகிறேன் என்று கூறுகிறார். அதற்கு நீ என் கேர்ள் ப்ரண்டாக இருந்தால் மட்டுமே உனக்கு உதவி செய்வேன் என்று கூற, நானும் உன்னை காதலிக்க மாட்டேன் கேர்ள் ப்ரண்டாக மட்டுமே இருப்பேன் என்று கூறி விடுகிறார் க்ரித்தி.

வருட கணக்கில் இவர்கள் சந்திப்பு நடக்கும் நிலையில் தனுஷுக்கு க்ரித்தி மீது அதீத காதல் ஏற்பட, க்ரித்திக்கோ தனுஷ் மீது காதல் இல்லை.
ஒரு கட்டத்தில் தன் காதலை முக்தியிடம் சங்கர் சொல்ல அதற்கு அவள் நிபந்தனை விதிக்கிறாள். அந்த நிபந்தனையை சங்கர் பூர்த்தி செய்தானா? இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
சங்கர் என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் தனுஷ். தமிழ் சினிமாவை கடந்து பாலிவுட்டிலும் தனது வெற்றிக் கொடியை நட்டியிருக்கிறார் தனுஷ் என்று தான் சொல்ல வேண்டும். அடிதடி, சண்டை, இரத்தம் என்று வந்து கொண்டிருக்கும் பாலிவுட்டில் காதல் படைப்பாக உருவாகியுள்ள இப்படம் நல்லதொரு படமாக வந்திருப்பதில் கூடுதல் மகிழ்ச்சி.
க்ரீத்தி மற்றும் தனுஷ் இருவருக்குமிடையேயான கெமிஸ்ட்ரி படத்திற்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது. க்ரீத்தியின் அழகும் நடிப்பும் காட்சிகளில் கூடுதல் அழகை கொட்டிக் கொடுத்திருக்கிறது.
காதல் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி படத்தை நன்றாகவே இயக்கியிருக்கிறார் இயக்குனர். ஏ ஆர் ரகுமானின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டுமே படத்திற்கு கூடுதல் பலம் தான்.
ஒளிப்பதிவு அழகை அள்ளிக் கொடுத்திருக்கிறது.





