
மூன்று இளம் வயது இளைஞர்கள் செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் மூவருக்கும் சமூக ஊடக வலைதளங்ளில் இருப்பவர்களைப் போன்று தங்களும் வாழ்க்கையில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும். மேலே வர வேண்டும் என்ற எண்ணம்.
அந்த ஆசையில் மூவரும் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பிக்கின்றனர். இவர்கள் போஸ்ட் செய்யும் வீடியோ வைரலாகி விட, மூவருமே பிரபலமாகி விடுகின்றனர்.
திரைப்பட துறையில் அடியெடுத்து வைக்கும் இவர்களது முயற்சி படுதோல்வியில் முடிகிறது. அதன்பிறகு இவர்களது வாழ்க்கை என்னவானது என்பதே படத்தின் மீதிக் கதை.
நகரப் பகுதிகளில் மட்டுமல்லாமல், கிராமப்புறத்திலும் யூடியூப் என்பது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் ஏற்படும் வளர்ச்சி என்ன வீழ்ச்சி என்ன என்பதையும் வெளிச்சமகா காட்டியிருக்கிறார் இயக்குனர்.
பல இடங்களில் பலரையும் சிந்திக்க வைக்கக் கூடிய வகையிலான ஒரு திரைக்கதையை அமைத்து, அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.
சமூகத்திற்கு தேவையான ஒரு விஷயத்தை கூற வந்த இயக்குனரை பெரிதாகவே பாராட்டலாம். ஆனால், இப்படியான பயமுறுத்தலை சற்று குறைத்திருக்கலாம். இருந்தாலும், கூற வந்த கருத்திற்காக இயக்குனரை பாராட்டித்தான் ஆக வேண்டும்.
இசையும் ஒளிப்பதிவும் கைகொடுத்திருக்கிறது.
தடை அதை உடை – விழிப்புணர்வு படைப்பு





