Spotlightவிமர்சனங்கள்

ஜின் – விமர்சனம் 2.75/5

CAST: Mugen rao , Bhaviya Trikha , Vadivukkarasi , Balasaravanan, Radha Ravi, Nizhgal ravi, Vinothini, Rithivik

மலேசியாவில் தனது நண்பர்களோடு ஆடம்பர விடுதியில் பொழுதுபோக்கு பாடகராக இருக்கிறார் நாயகன் முகேன் ராவ். ஒப்பந்தம் முடிந்துவிட்டபடியால், அங்கிருந்து தனது சொந்த ஊரான சென்னைக்கு வர தயாராகிறார். அந்த சமயத்தில், பழங்கால பொருட்கள் விற்கும் கடைக்குச் செல்லும் முகேன், அங்கிருக்கும் பெட்டி ஒன்றை பார்க்கிறார். அதில், ஜின் ஒன்றை அடைத்து வைத்திருப்பதாகவும் அது நல்ல ஜின் என்றும் கூறுகிறார் கடைக்காரர்.

((ஜின் என்றால், அரபு மற்றும் இஸ்லாமியக் கலாச்சாரங்களில் இருந்து வரும் ஒரு ஆவி அல்லது மாயப் பொருள். இது மனிதர்களைப் போல, ஆனால் அவர்களுக்குத் தெரியாத ஒரு வேறுபட்ட உலகத்திலிருந்து வந்தவை. ஜின் களில் பல வகைகள் உள்ளன, சில நல்லவை, சில கெட்டவை))

முகேன் எடுத்துக் கொண்டது நல்ல ஜின். அதை வாங்கிக் கொண்டு தனது ஊருக்கு வருகிறார். சென்னை வந்ததும் நாயகி பவ்யா தரிகாவை சந்திக்கிறார். இருவரும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ள, இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர்.

இவர்களின் காதல் பின், திருமணத்தில் முடிவடைகிறது. முகேன் எடுத்து வந்த ஜின்’னை, அவரது வீட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை. ஜின் வந்ததில் இருந்து அபசகுணங்கள் நடப்பதாக அவரது வீட்டில் இருப்பவர்கள் நினைக்கிறார்கள்.

வீட்டில் தனியாக இருந்த பவ்யா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடக்கிறார். பவ்யாவின் இந்த நிலைக்குக் காரணம், ஜின் தான் என்று வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் கூற, கோபத்தில் ஜின்’ஐ தூக்கி வெளியே வீசி விடுகிறார் முகேன்.

அதன்பிறகு, முகேன் ராவிற்கு என்ன நடந்தது.? பவ்யா காப்பாற்றப்பட்டாரா.? முகேனை ஜின் சுற்றி சுற்றி வர என்ன காரணம்.?

நாயகன் முகேன் ராவ், நல்ல எனர்ஜியான தனது கதாபாத்திரத்தை மிகவும் கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார். பவ்யாவுடனான காதல், ஆக்‌ஷன், பால சரவணனோடு காமெடி என தனக்கானதை அளவாக செய்து முடித்திருக்கிறார். இருந்தாலும், ஆங்காங்கே இன்னும் சற்று நடிப்பின் திறமையை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கலாமோ என்றும் நினைக்க வைத்துவிட்டார் முகேன்.

படத்தில் அழகாகவும் நடிப்பில் அளவாகவும் நடித்து காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் நாயகி பவ்யா.

பால சரவணனின் காமெடி படத்தில் நன்றாகவே வொர்க் அவுட் ஆகியுள்ளது.

ராதாரவி, இமான் அண்ணாச்சி, வடிவுக்கரசி, நிழல்கள் ரவி, வினோதினி வைத்தியநாதன் என சீனியர்கள் தங்களது நடிப்பை அளவாக செய்து முடித்திருந்தனர்.

அடுத்து இதுதான் நடக்கும் என எளிதாக படம் பார்ப்பவர்கள் கதையை யூகிக்கும் வண்ணம் திரைக்கதை நகர்ந்தது படத்திற்கு சற்று பலவீனம் தான். சின்ன சின்ன ட்விஸ்ட் காட்சிகளை ஆங்காங்கே வைத்திருந்திருக்கலாம்.

தமிழ் சினிமாவில் வரும் வழக்கமான வில்லன்களாக வருகின்றனர் இப்படத்தின் வில்லன்களும்.

குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் ஜின், மற்றவர்களுக்கு தெரியாமல் இருப்பது.. முரட்டுத்தனமான உடம்போடு வரும் ஜின், குரலில் மட்டும் ஏனோ “சிலம்பம் கத்துக் குடுங்க மாஸ்டர்…” என்னும் குரல் போல் காமெடி செய்து வைத்திருப்பது…. என இது போன்ற ஒரு சில காட்சிகளை இயக்குனர் இன்னும் நன்றாகவே கவனித்திருக்கலாம்..

படத்தின் ஆரம்பத்தில் ஒரு பெண்ணின் உடம்பிற்குள் இருக்கும் ஜின்’னை வெளியேற்றும் காட்சிகள் மிரள வைத்தது. க்ளைமாக்ஸிலும் அதே மிரள வைக்கும் காட்சிகளை வைத்திருந்தால் இன்னும் மிரட்டலாக இருந்திருக்கலாம்.

ஜின்னின் ப்ளாஷ் பேக் காட்சிகள் சுவாரஸ்யம்..

ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை இரண்டுமே படத்திற்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது. பாடல்களும் ரசிக்க வைத்திருக்கின்றன.

மொத்தத்தில்,

ஜின் – குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு திரைப்படம்…

Producer – T R BALA
DIRECTOR – T R BALA
DOP – ARJUN RAJA
MUSIC DIRECTOR – VIVEK MERVIN
EDITOR – DEEPAK
ART DIRECTOR – DINESH KUMAR
STUNT MASTER – PRADEEP DINESH
SOUND DESIGN – T UDHAYA KUMAR
VFX – VIPIN VIJAYAN
COLORIST – SHANMUGA PANDIYAN
COSTUME DESIGNER – DEEPTHI
PRO – Nikil Murukan

Facebook Comments

Related Articles

Back to top button