
இந்திய எல்லையில் சீன ஹெலிகாப்டர் ஒன்று வட்டமடித்ததால் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.
இந்திய – சீன எல்லையான லடாக் பகுதியில் சீன ஹெலிகாப்டர் வட்டமடித்து. இதனால் இந்திய ராணுவம் கோபமடைந்து, நமது விமானப்படையின் இரண்டு சுகோய் – 30 எம் கே ஐ ஜெட் விமானங்களை அங்கே பறக்க விட்டது.
அங்கு அவை வட்டமடித்து, நமது வீரத்தை பறைசாற்றியது. சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியா தங்கள் பக்கம் இழுக்க முயன்று வருகிறது. இதனால், இந்தியா மீது சீனா கடும் கோபம் கொண்டுள்ளது.

இதனால், எல்லையில் போர் பதட்டத்தை ஏற்படுத்த இப்படியான நிகழ்வை நடத்துவதாக தெரிகிறது.
ஆனால், இது வழக்கமான பயிற்சிக்காக மட்டுமே விமானங்கள் பறந்ததாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
Facebook Comments





