Spotlightசினிமா

அதிகரிக்கும் காட்சிகள்; முன்னேறும் ”போர் தொழில்”!

அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் நடிப்பில் உருவாகி கடந்த வெள்ளிக்கிழமை அன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் “போர் தொழில்”.

இந்த வாரம் வெளியான படங்களில் விமர்சன ரீதியாக போர் தொழில் நல்லதொரு வரவேற்பை பெற்றிருந்தது.

படம் வெளியான வெள்ளிக்கிழமை அன்று படம் பார்த்த பார்வையாளர்களிடம் கிடைத்த அதீத வரவேற்பைத் தொடர்ந்து, காட்சிகள் அதிகரிக்கப்பட்டன.

சனிக்கிழமையை விட ஞாயிற்றுக்கிழமையான இன்று அதை விட அதிகமான காட்சிகள் போர் தொழில் படத்திற்கு கிடைத்த வண்ணம் இருக்கிறது.

தொடர்ந்து திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் தனி முத்திரையான கதையோடும், திரைக்கதையோடும் போர் தொழில் உருவாகியிருப்பதால், படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button