Spotlightசினிமா

ரியோ , அம்மு அபிராமி ஆட்டத்தில் வைரலாகி வரும் “கரக்கி” ஆல்பம் பாடல்!

Think Music தனது புதியஆல்பம் பாடலான ‘கரக்கி’ பாடலை சில தினங்களுக்கு முன் வெளியிட்டது. வெளியான குறுகிய காலத்தில் லட்சக்கணக்கான பார்வைகளை கண்டதுடன், அநேக மக்களால் வரவேற்பும் பெற்றது.

இந்த சுயாதீன ஆல்பம் பாடலை அடிக்ரிஸ் இசையமைத்துள்ளார் மற்றும் மிகவும் பிரபலமான நாட்டுப்புற கலை குழு ஜோடிகளான செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி ஆகியோர் இப்பாடாலை பாடியுள்ளனர்.

கிராமத்து திருவிழாவின் போது ஒரு பையனும் பெண்ணும் ஒருவருக்கொருவர் தங்கள் காதலை முன்மொழிவது போன்ற இனிமையான மற்றும் கவர்ச்சிகரமான கருவினை இப்பாடல் கொண்டுள்ளது. தலைசிறந்த ஒளிப்பதிவும், அற்புதமான நடன அமைப்பும் இந்தப் பாடலை, ஒரு சிறந்த சார்ட்பஸ்டர் ஹிட்டாக மாற்றியதில் முக்கிய பங்கு வகித்துள்ளது.

Think Music பல்வேறு கருக்களில் வித்தியாசமான களங்களில் பாராட்டுக்குரிய வகையிலான, சுதந்திரமான ஆல்பம் பாடல்களை இசை ஆர்வலர்களுக்குத் தொடர்ந்து வழங்கி வருகிறது. அந்த வகையில் Think Music நிறுவனத்திற்கு இப்பாடல் மற்றுமொரு சார்ட்பஸ்டர் ஹிட்டாக அமைந்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button