Spotlightசினிமா

கிருஷ்ணாவின் திரு.குரல் …. ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு!

‘தீதும் நன்றும்’ படத்தை தொடர்ந்து N. H.ஹரி சில்வர் ஸ்கிரின் சார்பில் H.சார்லஸ் இம்மானுவேல் தயாரிக்கும் இரண்டாவது படம் ‘திரு.குரல்’. அறிமுக இயக்குனர் பிரபு என்பவர் இயக்கும் இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. ஆகஸ்ட் 20 முதல் படப்பிடிப்பு துவங்குகிறது.

கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இயக்குனர் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்திற்கு ‘விக்ரம் வேதா’ புகழ் சாம். சி.எஸ் இசையமைக்கிறார். ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, வெங்கட் ரமணன் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை – தியாகராஜன், ஸ்டண்ட் – ஹரி, நடனம் – ஸ்ரீ க்ரிஷ்.

இந்த படத்தை விநியோகஸ்தர் சிங்காரவேலன் உலகம் முழுவதும் வெளியிட உள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button