ஹரீஷ் பிரபு இயக்கத்தில் பாரதிராஜா, அருள்நிதி, ஆத்மிகா, ஆஷ்ரப், ஜீவா, ஹரீஷ் சோம சுந்தரம், மகேந்திரன், மோனிகா, சுபத்ரா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இன்று திரைக்கு வந்திருக்கும் திரைப்படம் தான் “திருவின் குரல்”..
கதைப்படி,
தனது அப்பா பாரதிராஜா மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கிறார் மகனான அருள்நிதி. வாய் பேச இயலாத அருள்நிதி, ஒரு சிவில் இஞ்சினியரிங்க் பட்டதாரி. பாரதிராஜாவிற்கு எதிர்பாராமல் விபத்து ஏற்பட, அவரை அரசு மருத்துவனைக்கு கூட்டிச் செல்கிறார் அருள்நிதி.
அரசு மருத்துவமனையில் ஆஷ்ரப், ஜீவா, ஹரீஷ் சோம சுந்தரம், மகேந்திரன் உள்ளிட்ட நால்வரும் அவ்வப்போது வழிப்பறி கொள்ளை, கொலை செய்து வருகிறது.. மருத்துவமனையில், லிஃப் ஆப்ரேட்டராக இருக்கும் ஆஷ்ரப்பிடம் அருள்நிதி பகையை ஏற்படுத்தி விடுகிறார்.
அருள்நிதியின் நிம்மதியை சீர்குழைக்க நினைக்கும் அந்த நால்வர் கொண்ட கும்பல், என்னவெல்லாம் செய்தது.?? இந்த நால்வரிடம் இருந்தது தனது அப்பாவையும் குடும்பத்தையும் எப்படி காப்பாற்றினார் என்பதே படத்தின் மீதிக் கதை.
கதைக்கான நாயகனாக வழக்கம்போல் ஜொலித்திருக்கிறார் அருள்நிதி. மிரட்டலான பார்வை, உடல் மொழி என ஒரு எளிமையான குடும்பத்தில் பிறந்து தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று இருக்கும் ஒரு இளைஞனின் போராட்டத்தை கண்முன்னே நிறுத்தியிருக்கிறார் அருள்நிதி. ஒரு சில காட்சிகளில் ஓவர் ஆக்டிங்க் எட்டிப் பார்த்தாலும், ஓகேவாக நடித்திருக்கிறார் பாரதிராஜா.
நாயகியாக ஆத்மிகா அழகு தேவதையாக காட்சிக்கு காட்சி மெருகேற்றியிருக்கிறார். அளவான காட்சிகள் என்றாலும் அம்சமானவையே…
வில்லனாக வந்த ஆஷ்ரப், ஜீவா, ஹரீஷ் சோம சுந்தரம், மகேந்திரன் நால்வரும் மிரட்டலான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். கொடுரமான வில்லனுக்கான பார்வையை நால்வரும் கொடுத்து மிரள வைத்திருக்கிறாரகள். அரசு மருத்துவமனைக்குச் செல்பவர்கள் இப்படத்தைப் பார்த்துவிட்டு போனால் சற்று பீதி ஏற்படுவது நிச்சயம்.
நல்லதொரு மூலக்கருவை எடுத்துக் கொண்ட இயக்குனர் அதை படமாக்கிய விதத்தில் சற்று தடுமாறியிருக்கிறார்.
பல இடங்களில் லாஜிக் ஓட்டைகள் எட்டிப் பார்க்கிறது. வீட்டிற்கு வில்லன் வந்துவிட்டு போனதை அறிந்த அருள்நிதி, அடுத்த காட்சியிலேயே குழந்தையை தனியாக அனுப்பியது, எப்போதும் அடித்து துவம்சம் செய்யும் அருள்நிதி அந்த இடத்தில் மட்டும் அடிவாங்கிக் கொண்டே இருப்பது, மருத்துவமனையில் ஒரு ரசீதை கொடுத்து கையெழுத்து வாங்கி வரவேண்டும் என்று சொல்லும் காட்சியில், பட்டதாரி இளைஞரான அருள்நிதிக்கு அது எதற்காக வாங்க சொல்கிறார்கள் என்று கூட புரிந்து கொள்ள முடியாதா.? நால்வரையும் நன்றாகவே பகைத்துக் கொண்டோம் என்று தெரிந்தும் கூட, அதே இடத்தில் இருந்து அப்பாவிற்கு சிகிச்சை பார்த்தது.? கடைசி கட்ட சண்டைக் காட்சியில் வில்லனான ஹரீஷ் சோமசுந்தரம் அடிக்க அடிக்க எழுந்து வந்து கொண்டே இருந்தது என அடுக்கடுக்கான இடங்களில் பல சோதனைகளை உள்ளே வைத்திருக்கிறார் இயக்குனர்.?
சற்று சோதனை தான் என்றாலும் எடுக்கப்பட்ட விதத்தில் இயக்குனராக ஜெயித்திருக்கிறார் ஹரீஷ் பிரபு. பரபரப்பு, படபடப்பு கொடுப்பதில் கிங்’ஆக நின்றிருக்கிறார் இயக்குனர்.
சாம் சி எஸ் பின்னணி இசை ஓகே என்றாலும், ஒரு சில இடங்களில் சத்தத்தை குறைத்திருக்கலாம்.
ஒளிப்பதிவு படத்திற்கு மற்றொரு பில்லராக இருந்தது படத்திற்கு பலம்.