
முறைமாமன் ஊருக்கு வருகிறான் என்பதை அறிந்து அவனை காண ஓடோடி வருகிறாள் நாயகி. ஆனால், அவளை கண்டதும் அடித்து துரத்துகிறான். மாமனின் செயலாள் அவள் அவமானம் அடைகிறாள். இதனால் சுற்றத்தாரர்கள் இரு பிரிவாகின்றனர். அமைதியாக இருந்த கிராமம் போர்களமாகிறது.
போர்களமான கிராமம் அமைதியானதா ? முறைமாமன் ஏன் தன்னை காணவந்த நாயகியை அடித்து துரத்தினான்.? என்பதன் பின்னணியில் உருவாகியுள்ளது உலகநாதன்.
கதையின் நாயகனாக அட்சயன் நடித்துள்ளார். நாயகிகளாக யோகதர்ஷினி மற்றும் கிரட்டா நடித்துள்ளனர்.
நகைச்சுவையுடன் கலந்து குணச்சித்திர வேடத்தில் கன்jஞ கருப்பு நடித்துள்ளார்.
AD ஆதிபோட்டோ சார்பில் ஆதி இப்படத்தை தயாரித்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம், சண்டை பயிற்சி, நடனம, மற்றும் ஒளிப்பதிவு செய்து படத்தினை இயக்கியிருக்கிறார் ஆதவன்.
இசையினை சார்லஸ் தனா செய்துள்ளார். படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.





