Spotlightசினிமா

தோசா டைரீஸ் தயாரிப்பில் வரலட்சுமி சரத்குமார் இயக்குனராக அறிமுகமாகும்“சரஸ்வதி”

நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் அவரது சகோதரி பூஜா சரத்குமார் இணைந்து தோசா டைரீஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் மூலம் தங்கள் முதலாவது தயாரிப்பை தொடங்கியிருப்பதை, மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.

இந்த சிறப்பான துவக்கத்தில், “சரஸ்வதி” என்ற படத்தின் மூலம், வரலட்சுமி சரத்குமார் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் முதன்மை கதாபத்திரத்தில் நடிக்க பிரபல நட்சத்திரங்கள் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நவின் சந்திரா ஆகியோர் நடிக்கின்றனர்.

முன்னனி இசையமைப்பாளர் தமன் S இசையமைக்க, A.M.எட்வின் சகாய் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
படத்தொகுப்பு – வெங்கட் ராஜன்
கலை இயக்கம் – சுதீர் மச்சர்லா

திரையுலகில் தங்கள் புதிய பயணத்தை தொடங்கும் இந்த முயற்சி, சகோதரிகள் இருவருக்கும் மறக்க முடியாத தொடக்கமாக அமைந்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button