Spotlightஇந்தியாசினிமாதமிழ்நாடு

நான்காம் கட்ட ஊரடங்கு..?? – பிரதமர் மோடியின் முழு உரை!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சற்று முன் இந்திய மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.

அதில்,

”உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு 3 லட்சம் பேர் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது.

ஒரே ஒரு வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையே உலுக்கி எடுத்து வருகிறது

ஒட்டுமொத்த உலகமும் கொரோனாவை எதிர்த்து போராடி வருகிறது

கொரோனாவால் இந்தியர்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்

மனித இனத்தால் கற்பனை செய்து பார்க்க முடியாத மிகப் பெரிய பாதிப்பு.

நாம் இதற்கு முன்னர் இப்படியான ஒரு பேரிடரை கேள்விபட்டதும் பார்த்ததும் இல்லை

கொரோனா போன்ற தாக்குதல் நாம் நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்று

கொரோனா வைரஸ் முன்னால் நம் மனித இனம் தோற்றுப் போய்விட்டது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்

நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ளத்தான் முடியும்

இந்தியாவின் தற்சார்பு தன்மையை இப்போது வெளிப்படுத்தி வருகிறோம்

கொரோனா தாக்குதலானது 21-ம் நூற்றாண்டானது இந்தியாவுக்கானது என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது

காசநோய், போலியோ போன்ற பிரச்சனைகளை நாம் எதிர்கொண்டு போராடி இருக்கிறோம்

கொரோனாவையும் நம்மால் எதிர்கொண்டு போராட முடியும் என்பதை நிரூபிப்போம்

இந்தியா அனுப்பி வைத்த மருந்துகள்தான் கொரோனாவுக்கு எதிரான போரில் உலக நாடுகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி கொடுத்தது

கொரோனா தொற்று பின்னடைவிலிருந்து முன்னேற ரூ.20 லட்சம் கோடி ரூபாய் நிதித்தொகுப்பு உதவி

இத்திட்டம் குறித்த விரிவான விவரங்களை நிதியமைச்சர் அறிவிப்பார்

சிறு,குறு நிறுவனங்களுக்கு இந்த திட்டம் உதவும்

உள்நாட்டு தயாரிப்புகளின் முக்கியத்துவத்தை கொரோனா வைரஸ் நமக்கு உணர்த்தியிருக்கிறது

பிறரை சார்ந்திருக்காமல் இருப்போம் என்று 130 கோடி இந்தியர்கள் சூளுரை ஏற்க வேண்டும்

நான்காம் கட்ட ஊரடங்கு பற்றி மே 18-க்குள் உங்களுக்கு தெரிவிக்கப்படும். ஆனால் அது முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும்.’ என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button