
விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழக மக்களிடையே நீங்கா இடம் பிடித்தவர் தான் புகழ்.
தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது திறமையை நிரூபித்து வந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் தனக்கான ரசிகர்களை உருவாக்கினார்.
தொடர்ந்து சினி்மாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த புகழ், தற்போது ஹீரோவாகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இன்று புகழுக்கும் நீண்ட வருடங்களாக காதலித்து வந்த பென்ஸி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது.
திண்டிவனம் அருகேயுள்ள தீவனூர் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.
இயக்குனரும் நடிகருமான சசிகுமார் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். மேலும், பல நட்சத்திரங்களும் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர்.
Facebook Comments