Spotlightசினிமா

மாமனிதன் ஒரு அன்பு சித்திரம்; சீனு ராமசாமியை புகழ்ந்த மிஷ்கின்!

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, குரு சோமசுந்தரம், காயத்ரி நடிக்க வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “மாமனிதன்”.

கடந்த வெள்ளியன்று வெளியான இத்திரைப்படம், தொடர்ந்து குடும்ப ரசிகர்களிடையே நல்லதொரு வரவேற்பை பெற்றிருக்கிறது. பல நட்சத்திரங்களும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர். இயக்குனர் இமயம் பாரதிராஜாவை தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் சீனுராமசாமிக்கு வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். அதில்,

”சீனு ராமசாமிக்கு எனது நன்றிகள்!

எல்லா சாமானியர்களின் வாழ்க்கையிலும் விதி என்னும் சூறாவளி அவ்வப்போது வாழ்க்கையை உடைத்துப் போடுகிறது. மாமனிதன் என்ற கதையில் ராதாகிருஷ்ணன் என்ற சாமானியனின் வாழ்க்கை ஒரு கயவனால் உடைக்கப்படுகிறது. ராதாகிருஷ்ணன் ஓடுகிறான். வழியில் அவன் சந்திக்கும் மனிதர்கள், நிகழ்வுகள் அவனை மீண்டும் ஒரு முழு மனிதனாக்குகிறது. அவன் “மாமனிதன்” ஆகிறான்.

மிக எளிமையாக எடுக்கப்பட்ட ஒரு அன்பு சித்திரம். இந்தப்படம் என் சிந்தனைகளை மேம்படுத்துகிறது. என் வாழ்க்கையை அர்த்தப்பட வைக்கிறது.

மசாலா படங்களுக்கும் பம்மாத்துப் படங்களுக்கும் நடுவே ஒரு மேன்மையான படத்தை தந்த சீனு ராமசாமிக்கு என் மனதின் ஆழத்தில் இருந்து நன்றிகள்.” என்று தெரிவித்துள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button