
விக்ரம் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் தான் ‘கடாரம் கொண்டான்’. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
விக்ரம் அடுத்ததாக அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் விகரமிற்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேயாதமான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர் அடுத்ததாக விக்ரமோடு ஜோடியாகிறார்.
இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் மாதம் இதன் படப்பிடிப்பு துவங்கப்படவிருக்கிறது.
Facebook Comments