Spotlightவிளையாட்டு

இந்திய வீரர்களின் அபாரமான பந்துவீச்சில் தடுமாறும் ஆஸ்திரேலியா!

 

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 622 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து பேட்டிங்க் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி 198 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பிறகு ஹேண்ட்ஸ்காம்ப்புடன் பாட் கம்மின்ஸ் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல், அதேநேரத்தில் சீரான வேகத்தில் ரன்களும் சேர்த்தது. மூன்றாவது நாளான இன்று ஆட்டத்தில் 16.3 ஓவர் எஞ்சியிருந்த நிலையில், இடையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தடைபட்டது. பின்னர் மழை பெய்ததால் மூன்றாம் நாளின் எஞ்சிய ஆட்டம் கைவிடப்பட்டது. இன்றைய ஆட்டத்தில் 16.3 ஓவர் குறைவாக வீசப்பட்டது.

இந்த ஓவர்களை வீசியுள்ளால் குறைந்தது 2 விக்கெட்டுகளை இந்திய அணி எடுத்திருக்கக்கூடும். ஒருவேளை விக்கெட்டை இந்திய அணி எடுக்கவில்லை என்றுாலும்கூட, ஆஸ்திரேலிய அணியின் ரன்கள் அதிகரித்திருக்கின்றன. இவை இரண்டுமே தடைபட்டுள்ளது.

இந்த 16 ஓவர்களுக்கு ஈடுகட்ட விதமாக எஞ்சிய இரண்டு நாட்கள் ஆட்டமும் அரைமணி நேரம் முன்கூட்டியே தொடங்கப்பட உள்ளது. ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button