Spotlightசினிமாவிமர்சனங்கள்

தலைநகரம் 2 – விமர்சனம் 3/5

யக்குனர் வி இசட் துரை இயக்கத்தில் சுந்தர் சி, பாலக் லால்வானி, தம்பி ராமையா, பாகுபலி பிரபாகர், ஆயிரா, விஷால் ராஜன், சேரன் ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “தலைநகரம் 2”.

கதைப்படி,

மத்திய சென்னை, வட சென்னை மற்றும் தென் சென்னை இந்த ஏரியாக்களை தன் கண்ட்ரோலில் வைத்துள்ளனர் ரவுடிகளான நஞ்சுண்டா, மாறன், வம்சி.

இவர்கள், தங்களது தொழிலில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க மோதி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், முன்னொரு காலத்தில் சென்னையை தன் கண்ட்ரோலில் வைத்திருந்த ரைட்டு (சுந்தர் சி), அமைதியாக ரியல் எஸ்டேட் தொழில் ஒன்றை தம்பி ராமையோவோடு சேர்ந்து நடத்தி வருகிறார்.

வேண்டுமென்றே சுந்தர் சி’யை நஞ்சுண்டா டீம் சீண்ட, மீண்டும் கையில் கத்தியை தூக்குகிறார் சுந்தர் சி…

மலைபோல் உயர்ந்து நிற்கும் நஞ்சுண்டா, மாறன் மற்றும் வம்சி மூன்று கும்பலையும் சுந்தர் சி எப்படி துவம்சம் செய்தார் என்பதே படத்தின் மீதிக் கதை…

சுந்தர் சி தான் தலைநகரம் படத்தில் நடித்திருந்தார் என்பதால், இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே இதில் நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் மட்டுமே அதிரடி காட்டியிருக்கிறார். சற்று பாவனைகளையும் ஆங்காங்கே கொடுத்திருந்தால் கதைக்கு இன்னும் வலுவாகவே இருந்திருக்கும்.

வில்லன்களாக நடித்திருக்கும் மூவரும் படத்திற்கு பலமாகவே இருந்திருக்கிறார்கள். அதிலும் நஞ்சுண்டா கேரக்டரில் நடித்திருந்த பாகுபலி பிரபாகர், உருவத்திற்கு ஏற்ற கேரக்டரை ரம்மியமாக செய்து முடித்திருக்கிறார்.

நாயகியான பாலக் லால்வானி, சில காட்சிகளில் க்ளாமராக நடித்திருக்கிறார். கதை ஓகே என்றாலும், பிரமாண்டமான நாயகன் வேறு யாராவது நடித்திருந்தால், கதைக்கான வலுவும் அதிகமாகவே இருந்திருக்கும். அதுமட்டுமல்லாமல், முதல் பாதியில் இருந்த ஒரு வேகம் இரண்டாம் பாதியில் இல்லாமல் போனது.

செய்த கொலைகளை மறைக்க இப்படியெல்லாம் செய்வார்களா என்று கேள்வி கேட்கும் அளவிற்கு பல மர்மமானதை கூறியிருக்கிறார் இயக்குனர்.

படத்தின் பின்னணி இசை தாறுமாறு தக்காளி சோறாக கொடுத்திருக்கிறார் ஜிப்ரான். கதையின் ஓட்டத்திற்கு ஏற்ப, கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவும் வேகம் கொடுத்திருக்கிறது.

தலைநகரம் 3 ஆம் பாகத்திற்கு வேறு ஒரு ஆக்‌ஷன் ஹீரோவை களமிறக்கி தனது மாபெரும் வெற்றியை இயக்குனர் வி இசட் துரை கொடுப்பார் என்ற நம்பிக்கையோடு விமர்சனத்தை முடித்துக் கொள்ளலாம்.

தலைநகரம் 2 – தாக்குப் பிடித்தது.. 

Facebook Comments

Related Articles

Back to top button