Spotlightசினிமா

ஜாதி இயக்குனர்களுக்கு சவுக்கடியாக வரும் “அருவா சண்ட”

யிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் பட நிறுவனம் சார்பில் வி.ராஜா தயாரித்துள்ள படம் “அருவா சண்ட”.

வருகிற டிசம்பர் 30-ம் தேதி உலகம் எங்கும் வெளியிடப்படுகிறது. சிலந்தி, ரணதந்த்ரா படங்களை இயக்கிய ஆதிராஜன், “அருவா சண்ட” படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.

இப்படத்தை பற்றி இயக்குநர் கூறியதாவது:

கஞ்சா கருப்பு, காதல் சுகுமார், விஜய் டிவி சரத், டைரக்டர் மாரிமுத்து, மதுரை சுஜாதா, வெங்கடேஷ், ரஞ்சன், யாசர், ரமேஷ், மூர்த்தி, வீரா, நிஷா ஆகியோரும் கதாபாத்திரங்களாகவே மாறியிருக்கிறார்கள். இந்த படத்தில் பல கபடி போட்டிகள் இடம் பெறுகின்றன. நிஜமான கபடி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி இருக்கிறார்கள். பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு கபடி போட்டிகளை விறுவிறுப்பாக படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் பாண்டி.

தரண்குமார் இசையமைத்திருக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதி இருக்கிறார். “வீரத்தமிழன் விளையாட்டுடா…” என்ற கபடிக்கான சிறப்பு பாடலையும், அம்மா பாடலையும் நான் எழுதி இருக்கிறேன். வைரமுத்து எழுதிய “சிட்டு சிட்டு குருவி” பாடலை நடிகை ரம்யா நம்பீசன் பாடியிருக்கிறார். வி ஜே சாபுஜோசப் எடிட்டிங் செய்திருக்கிறார். தீனா, ராதிகா மாஸ்டர்கள் நடன காட்சிகளை வடிவமைத்துள்ளனர். தளபதி தினேஷ் சண்டைக்காட்சி அமைக்க சுரேஷ் கல்லேரி கலை ஆக்கத்தை கவனித்திருக்கிறார்.

இயக்குநர் பா.ரஞ்சித் ஒரு சமூகத்திற்காக படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். இயக்குநர்கள் முத்தையா, மோகன் ஜி ஆகியோர் வெவ்வேறு சமுதாயத்தை முன்னிலைப்படுத்துகின்றனர். ஆனால் “அருவா சண்ட” இரண்டு தரப்பு நியாயங்களையும் அநியாயங்களையும் உரக்கப் பேசும்…. அனல் பறக்கப் பேசும் என்பது உறுதி” இவ்வாறு ஆதிராஜன் கூறினார்.

Facebook Comments

Related Articles

Back to top button