Spotlightசினிமா

தனுஷை இயக்கும் பியார் பிரேமா காதல் பட இயக்குனர்!!

ஜெகமே தந்திரம் படத்திற்கு பிறகு தொடர்ந்து பல படங்களை கையில் எடுத்து வைத்துள்ளார் நடிகர் தனுஷ்.

அவர் தற்போது, கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் மற்றும் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார்.

மேலும், செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்கவிருக்கிறார் தனுஷ்.

இதனைத் தொடர்ந்து பியார் பிரேமா படத்தின் இயக்குனர் இலன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஹரீஷ் கல்யாண் மற்றும் ரைஸா நடிப்பில் வெளியான இப்படம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், தனுஷ் இலனிடம் கதை ஒன்றை கேட்டதாகவும், கேட்டவுடன் படத்தின் கதை பிடித்து போக உடனே ஓகே சொல்லிவிட்டாராம் தனுஷ்.

மேலும், இப்படத்தை சத்ய ஜோதி பிலீம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button