நயன்தாரா நடித்திருக்கும் 65-வது திரைப்படம் ‘நெற்றிக்கண்’.
இந்தப் படத்தை நயன்தாராவின் காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது Rowdy Pictures நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். இது இவரது முதல் தயாரிப்பாகும்.
இசை – கிரிஷ், ஒளிப்பதிவு – N.கார்த்திக் கணேஷ், கலை இயக்கம் – S.கமலநாதன், சண்டை இயக்கம் – C.மகேஷ், படத் தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர், ஒலியமைப்பு – விஜய் ரத்தினம், உடை வடிவமைப்பு – சைதன்யா, ராவ், தினேஷ் மனோகரன், வசனம் – நவீன் சுந்தரமூர்த்தி, விளம்பர வடிவமைப்பு – கபிலன், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா D one, இணை தயாரிப்பு – K.S.மயில்வாகணன், தயாரிப்பு மேற்பார்வை – V.K.குபேந்திரன், தயாரிப்பு ஒருங்கிணைப்பு – G முருகபூபதி, M.மணிகண்டன்.
இப்படத்தில் நயன்தாரா பார்வையற்றவராக நடித்துள்ளார். நடிகர் அஜ்மல் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது..
இணையவாசிகளிடமும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது..
சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் வெற்றி பெற்று கவனம் ஈர்த்த ‘அவள்’ படத்தை இயக்கிய இயக்குநர் மிலிந்த் ராவ் இப்படத்தினை இயக்கியுள்ளார்.
இந்த ட்ரெய்லர் மிகவும் பாராட்டுதல் பெறுவதற்கு முக்கிய காரணியாக அமைந்தது படத்தின் படத்தொகுப்பு தான்… எடிட்டிங்கை மிகவும் நேர்த்தியாக கையாண்டு, அனைவரையும் மிரள வைத்திருக்கிறார் எடிட்டர் லாரன்ஸ் கிஷோர்.
அவள் படத்தில் தொடங்கி சிறு, இராவண கோட்டம், தேன், தி நெக்ஸ்ட் டோர் உள்ளிட்ட வெற்றி படங்களுக்கு இவரே எடிட்டிங்க் செய்துள்ளார்… அந்த வரிசையில் நெற்றிக்கண் படமும் ஹிட் அடிக்க இவரது எடிட்டிங்க் முக்கியமானதாக இருக்கும் என கருதப்படுகிறது.
இத்திரைப்படம் ஏற்கெனவே திட்டமிட்டபடி டிஸ்னி-ஹாட் ஸ்டார் ஓடிடியில் வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி வெளியாகிறது.