Spotlightசினிமா

‘தாதா 87’ படம் மூலமாக இசையமைப்பாளருக்கு கிடைத்த பெருமிதம்!

இசையமைப்பாளர் லியாண்டர் லீ மார்டிக்கு இந்த ஆண்டு ஒரு மிகச் சிறந்த ஆண்டாக அமைந்திருக்கிறது என்றால் அது மிகையில்லை. அவரை தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகம் செய்த தாதா 87 திரைப்படம், கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி வெளியானது.

டீசர் வெளியானதிலிருந்தே பரபரப்பாக பேசப்பட்டு வந்த அத்திரைப்படத்தில், சாருஹாசனுக்கு அவர் அமைத்திருந்த பிஜிஎம் பெரிதும் பாராட்டப்பட்டு வந்த நிலையில், பல நல்ல திரைப்பட வாய்ப்புகளையும் அது அவருக்கு பெற்று தந்திருக்கிறது எனலாம்.

ஜனவரி மாதத்தில், சிங்கப்பூரின் இந்தியன்ராகா அமைப்பினருடன் இணைந்து, லியாண்டர் தனது அடுத்த திரைப்படத்திற்கான குரல் தேடலில் ஈடுபட்டிருந்தார். நூற்றுக்கணக்கான சிங்கப்பூர் வாழ் இசை ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்நிகழ்ச்சியில் லியாண்டரும் தனது குழுவுடன் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சிக்கு தீபக் எஸ் ஐயர், தலைவர், இந்தியன்ராகா, சிறப்பான ஏற்பாடுகள், விளம்பரங்கள் என தனது முழு ஒத்துழைப்பும் அளித்திருக்க, இந்நிகழ்ச்சிக்கான போஸ்டர்களை தனது வளாகத்தில் வைத்துகொள்ள அனுமதி வழங்கி, சிங்கப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியும் (SIFAS) இந்த முயற்சியில் இணைந்து கொண்டது.

நிஷா ஷங்கர் எங்களது சிங்கப்பூர் பிரதிநிதியாக செயல்பட்டு, போட்டியாளர் பட்டியல் தயாரித்தல், தகவல் தொடர்பு மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றை சிறப்புடன் கவனித்து கொண்டார்.

தமிழ் திரையுலக மக்கள் தொடர்பாளரும், எனது நலன் விரும்பியுமான, நிகில் முருகன் ஊடகத் துறை தொடர்பானவற்றை சிறப்புடன் செய்து கொடுத்திருந்தார். இந்த நிகழ்ச்சியை வெற்றி பெற செய்வதில் எங்கள் குழு, மிகுந்த கவனத்துடன் இருந்தது.

இணைய வழியில் நூற்றுகணக்கானோர் பதிவு செய்திருந்த நிலையில், நிகழ்ச்சியின் இறுதி சுற்றுக்கு 15 பேரை தேர்வு செய்திருந்தோம். இன்று, ‘கேட்ச் லியாண்டர் சிங்கப்பூர் ஆடிஷன்ஸ்’ ன் வெற்றியாளரை அறிமுகப்படுத்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.

அபார திறமையுடனும், அர்பணிப்புடனும், ஆத்மார்த்தமாக பாடி அசத்திய “தர்ஷனா மகாதேவன்” இந்நிகழ்ச்சியின் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

“எனது இசை அமைப்பிற்கேற்ற மிகச் சரியான ஒரு குரலை தேர்ந்தேடுப்பதை விட ஒரு மிகச் சிறந்த மகிழ்ச்சி வேறேதும் இல்லை. தர்ஷனா ஒரு பாடகியாக பாடல் பாடுவதில் மட்டுமல்ல, இந்திய இசை பாரம்பரியத்தை சிங்கப்பூரில் விருத்தியடையச் செய்வதற்கும், தற்கால சந்ததியினருக்கு அதனை எடுத்து செல்வதிலும் அவருடைய பேரார்வம் என்னை மிகவும் வியப்படைய செய்தது. எனது வரவிருக்கும் திரைப்படத்தில் அவரை அறிமுகப்படுத்த உள்ளேன். அவரது இசைப் பயணம் சிறப்புடன் அமைய மனமாற வாழ்த்துகிறேன். இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட அனைவருமே மறுக்க முடியாத திறமைசாலிகளே, அவர்கள் அனைவரோடும் விரைவில் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன்”.

லியாண்டர் லீ மார்ட்டி – இசை அமைப்பாளர்.

Facebook Comments

Related Articles

Back to top button