
திருப்பத்துார் அருகே, கலெக்டரும், அவர் மனைவியும் நிலத்தில் இறங்கி நாற்று நட்டனர்.
திருப்பத்துார் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வருவதால், விவசாயிகள் நிலத்தில் நாற்று நடும் பணிகளை தொடங்கினர். திருப்பத்துார் அருகே மூக்கனுார் கிராமத்தில் நாற்று நடும் பணிகளை மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா இன்று ஆய்வு செய்தார்.
அப்போது அவர் மனைவி ஷிவாலிகா நாற்று நடுவதை ஆச்சரியத்துடன் பார்த்தார்.இதனால் கலெக்டர் அமர்குஷ்வாஹா நிலத்தில் இறங்கி சேறு, சகதியை பார்க்காமல் நாற்று நட்டார். அதை பார்த்த அவர் மனைவியும் நிலத்தில் இறங்கி நாற்று நட்டார். ஒரு மணி நேரம் கலெக்டரும், அவர் மனைவியும் விவசாயிகளோடு நாற்றுக்கள் நடுவதை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்தனர்.
Facebook Comments