Uncategorized

பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்கத்துக்கு வரும் தினந்தோறும் நாகராஜ்

இயக்குனர் நாகராஜ் 1998 ஆம் ஆண்டு நாகராஜ் என்பவர் இயக்கிய படம் தான் தினந்தோறும்’. முரளி – சுவலட்சுமி நடித்த இந்த படம் வெளிவந்தபோது பத்திரிகை உலகம் கொண்டாடி தீர்த்தது. இந்த படம் மிகப்பெரும் வெற்றி பெற்றதால், இவரது பெயரோடு படத்தின் டைட்டிலும் ஒட்டிக் கொண்டது.

பல வருடங்களுக்குப் பிறகு கெளதம் மேனன் இயக்கிய மின்னலே, காக்க காக்க படங்களுக்கு வசனம் எழுதிய நாகராஜ், தொடர்ந்து 2013 ஆண்டு ‘மத்தாப்பு’ என்ற படத்தை இயக்கியிருந்தார்.

பல வருடங்களுக்குப் பிறகு, Q சினிமாஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் சசிகுமார்.R தயாரிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் தினந்தோறும் நாகராஜ். பெயரிடப்படாத இந்த படத்திற்கு நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. ஜனவரியில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

இசையமைப்பாளர் C. சத்யா இசையமைக்கிறார்.

காடன், இடிமுழக்கம் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த அசோக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
நடனம் – சாண்டி
ஸ்டண்ட் – தினேஷ் சுப்பராயன்.
மக்கள் தொடர்பு – மணவை புவன்

Facebook Comments

Related Articles

Back to top button
Close
Close