SpotlightUncategorizedசினிமா

குறைந்தது வாய்ப்புகள்… செகண்ட் ஹீரோ சப்ஜெக்ட்க்கு ஜம்ப் ஆன அசோக் செல்வன்!!

நடிகர் நாகார்ஜுனாவின் 100-வது திரைப்படமாக உருவாகி வரும் ‘கிங் 100’ (King 100) படத்தில், நடிகர் அசோக் செல்வன் ‘கர்ணா’ கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் போஸ்டர் படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.

‘நித்தம் ஒரு வானம்’, ‘மேட் இன் கொரியா’ படங்களை இயக்கிய ர.கார்த்திக் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நாகார்ஜுனா, தபு, நடித்து வருகின்றனர். இந்த படத்தில் அசோக் செல்வன் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ராஜா மகாதேவன் ஒளிப்பதிவு செய்ய, நவீன் நூலி படத்தொகுப்பைக் கவனிக்கிறார்.

அசோக் செல்வனின் சமீபத்திய படங்கள் எதுவும் சரிவர செல்லாததால், தற்போது அவருக்கான பட வாய்ப்புகள் குறைந்துள்ளதாகவும், அதற்காகவே செகண்ட் ஹீரோ வாய்ப்புகள் இருந்தாலும் பரவாயில்லை என்று, கதை கேட்டு அதில் அவர் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

 ‘கிங் 100’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button