Spotlightசினிமா

பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி திரைப்படம் இணையத்தளத்தில் தீபாவளி அன்று வெளியீடு

காமராஜ், முதல்வர் மகாத்மா ஆகிய திரைப்படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி குறித்த ஆவணத் திரைப்படம் ஒன்றை ‘ஸ்ரீ ரமணா’ என்ற பெயரில் தயாரித்துள்ளது. இப்படம் வருகிற 27-10-2019 தீபாவளி தினத்தன்று இணையத்தளத்தில் வெளியிடப்படுகிறது.

ஸ்ரீ ரமண மகரிஷி பற்றி இதுபோன்றதொரு விரிவான திரைப்படமோ ஆவணப்படமோ இதுவரை வெளிவந்ததில்லை என்னும் அளவிற்கு பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் உலக அளவில் உள்ள ரமணர் பக்தர்கள் மத்தியிலும் ஆன்மிக அன்பர்களிடையேயும் ஒரு நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருவண்ணாமலையில் உள்ள ரமணாஸ்ரம நிர்வாகத்தினர், ரமண மகரிஷி குறித்த பல்வேறு அரிய செய்திகளை தந்து உதவியதோடு தங்களிடம் இருந்த அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளையும் தந்து உதவியுள்ளனர். அவைகளும் இந்த ஆவணப்படத்தில் ஆங்காங்கு தக்க இடங்களில் இணைக்கப்பட்டுள்ளன.

சித்தர்கள் வாழ்ந்துவந்த திருவண்ணாமலையின் ஆன்மிக மகத்துவம் குறித்து இதுவரை மக்கள் அறிந்திராத செய்திகள் பலவும் இப்படத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

காந்தி அடிகள் திருவண்ணாமலை வந்திருந்த போது அவர் பகவான் ரமண மகரிஷியை சந்திக்க இயலவில்லை. அதற்கான காரணமும் காட்சி வடிவில் படமாக்கப்பட்டுள்ளது.

திரு. தீனதயாளன் ஸ்ரீ ரமண மகரிஷி வேடத்தில் நடித்துள்ளார். புகழ்பெற்ற திரை நட்சத்திரங்கள் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

காமராஜர் மற்றும் காந்தி பற்றிய திரைப்படங்களைத் , தயாரித்து இயக்கியுள்ள அ.பாலகிருஷ்ணன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

திறமை வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒத்துழைப்புடன் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இசை : ஜெயப்பிரகாஷ்

கேமரா: எட்வின் சகாய்

மேற்கண்ட செய்திகளை தாங்கள் தங்களது மேலான பத்திரிகையில் வெளியிட்டு ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அ. பாலகிருஷ்ணன்

இயக்குனர், தயாரிப்பாளர்.

Facebook Comments

Related Articles

Back to top button